close
Choose your channels

இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்: பிரபல இயக்குனருக்கு கமல் வாழ்த்து!

Wednesday, August 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம் என பிரபல இயக்குனருக்கு உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஷங்கர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் ’இந்தியன்’ என்ற பிரமாண்டமான சூப்பர்ஹிட் படத்தில் நடித்த கமல் ஹாசன் தற்போது அவரது இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் ஷங்கருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், சுகன்யா, ரகுல் ப்ரித்திசிங், ப்ரியா பவானிசங்கர், பாபிசிம்ஹா, குரு சோமசுந்தரம், சமுத்திரக்கனி, வெண்ணிலா கிஷோர், மனோபாலா உள்பட பலரது நடிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் கார்த்திக் விரைவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையில் ரத்னவேலு ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos