சத்குரு ஜக்கிதேவ் முயற்சிக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

  • IndiaGlitz, [Tuesday,September 03 2019]

உலக நாயகன் கமல்ஹாசன் பகுத்தறிவு கொள்கையை கடைபிடித்து வந்தபோதிலும், அவருக்கு ரஜினிகாந்த், இளையராஜா உள்பட பல ஆன்மீகவாதிகள் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். கமல்ஹாசன் தனது பகுத்தறிவு கொள்கையை தனது குடும்பத்தினர் உள்பட யாரிடமும் திணிப்பதில்லை என்பது அவர் கடைபிடித்து வரும் முக்கிய கொள்கைகளில் ஒன்று

இந்த நிலையில் காவிரியை மீட்பதற்காக யோகா ஆசிரியரும் ஆன்மீகவாதியுமான சத்குரு ஜக்கி வாசுதேவ் இன்று முதல் அதாவது செப்டம்பர் 3 முதல் 15-ந்தேதி வரை தலைகாவிரியில் இருந்து திருவாரூர் வரை மோட்டார் சைக்கிள் பயணம் செல்ல இருக்கிறார். இந்த பயணம் குடகு, பெங்களூரு, மைசூரு, மாண்டியா, ஓசூர், தர்மபுரி, மேட்டூர், ஈரோடு, திருச்சி, தஞ்சை, சிதம்பரம், திருவாரூர் உள்பட 30 இடங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். இந்த பயணத்தின் நிறைவுதின நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். காவிரிக்காக ஈஷா பவுண்டேஷன் நடத்தும் மோட்டார் சைக்கிள் ஊர்வலத்திற்கு எனது வாழ்த்துக்கள். மத வேறுபாடின்றி இதுபோன்ற பொதுவான ஒரு விஷயத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டியது நமது கடமை. பகுத்தறிவு கொள்கை என்பதும் இதுதான்' ஜக்கிதேவ் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.