மக்கள் நீதி மய்யம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்: கமல் போட்டியிடுவது எங்கே?

அதிமுக, திமுக கூட்டணியை அடுத்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் மூன்றாவது அணி போட்டியிடுகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் சற்று முன் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது

இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக கமல்ஹாசன் இந்த தொகுதியின் மூலம் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் நடிகை ஸ்ரீபிரியா மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த பழ கருப்பையா தி.நகரில் போட்டியிடுகிறார் என்பதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் தாசப்பராஜ் என்பவர் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் சிங்காநல்லூரில் போட்டியிடுகிறார்.