சிவகார்த்திகேயன் ஜோடியாகிறாரா கமல்ஹாசன் மகள்? இயக்குனர் இந்த பிரபலமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’மதராஸி’ மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ’பராசக்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவரது அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
ஏற்கனவே வெங்கட் பிரபு உள்ளிட்ட சில இயக்குனர்கள் சிவகார்த்திகேயனுக்காக கதைகளை சொல்லி காத்திருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
'கூலி' படத்தை முடித்தவுடன், 'கைதி 2' படத்தை இயக்குவதற்கு முன்பே, லோகேஷ் கனகராஜ் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, சிவகார்த்திகேயன் ஜோடியாக இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
ஏற்கனவே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார் என்பதும், லோகேஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து ஒரு ஆல்பத்திலும் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து, லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்திலும் ஸ்ருதிஹாசன் தான் நாயகி என கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை என்பது, இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்த பின்னரே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com