அரசியலுக்கு வந்தபின் சினிமாவுக்கு முழுக்கா? கமல் விளக்கம்

  • IndiaGlitz, [Thursday,February 15 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ள நிலையில் இனிமேல் அவர் புதிய சினிமாக்களில் நடிக்க மாட்டார் என்றும் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 'இந்தியன் 2' படத்தில் மட்டுமே நடிப்பார் என்றும் கூறப்பட்டது.

கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது ஒருபுறம் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், கமல்ஹாசன் இல்லாத திரையுலகை நினைத்து பார்க்கவே முடியாது என்று அவரது ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றும் முழுநேர அரசியலுக்கு வந்த பிறகுதான் படங்களில் தொடர்ந்து நடிப்பதா? இல்லையா? என்பது குறித்து சொல்ல முடியும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு கமல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அமெரிக்க பள்ளியில் பயங்கர துப்பாக்கி சூடு: 19 வயது முன்னாள் மாணவன் கைது

புளோரிடோ மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் முன்னாள் மாணவன் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளதாகவும், 50 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் திடுக்கிடும் செய்தி வெளிவந்துள்ளது

பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?

'பேட்மேன்' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாப்கின் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஓவியாவுடன் சிம்பு! காதலர் தினத்தில் ஆச்சரிய அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த ஓவியா தற்போது ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி வரும் 'காஞ்சனா 3' படத்தில் நடித்து வருகிறார்.

திரையில் ஒளிர்ந்த காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள்: பாகம் 1

திரையில் ஒளிர்ந்த காலத்தால் அழியாத காதல் திரைப்படங்கள்...

குஜராத் தலைவர் ஜிக்னேஷ் மேவானியையும் விட்டு வைக்காத பிரியாவாரியர் கண்ணசைவு

மலையாள நடிகை பிரியாவாரியாரின் ஒரே ஒரு கண்ணசைவும், புருவ நடனமும் தென்னிந்திய ரசிகர்களை மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள இளைஞர்களை சுண்டி இழுத்துள்ளது