ரொம்ப பணக்கஷ்டம், 2000 ரூபாய்க்கு வேலைக்கு செல்கிறேன்: கமல்ஹாசனின் முன்னாள் மனைவி

  • IndiaGlitz, [Wednesday,May 11 2022]

ஒரு பக்கம் கமல்ஹாசன் கோடிக்கணக்கில் சம்பாதித்து கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசனின் மகள்களும் திரைப்படங்களில் நடித்து இலட்சக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசனின் முன்னாள் மனைவியும் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசனின் தாயாருமான சரிகா ஒரு நாளைக்கு 2000 ரூபாய்க்கு நடித்துக் கொண்டிருப்பதாக கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் கமல்ஹாசனை நடிகை சரிகா காதலித்து கடந்த 1998ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய மகள்கள் பிறந்தனர். இந்த நிலையில் 2004ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக கமல்ஹாசனை விவாகரத்து செய்த சரிகா, அதன் பின்னரும் ஒரு சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போதும் சில திரைப்படங்கள் மற்றும் ஓடிடி வெப்தொடர்களில் நடித்து வரும் சரிகா, லாக்டவுன் நேரத்தில் பணத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டதாகவும் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் சம்பளத்தில் நாடகத்தில் நடித்ததாகவும் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

கமல்ஹாசனின் மகள்கள் திரைப்படத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்து கொண்டிருக்கும் நிலையில் அவரது தாயார் 2000 ரூபாய்க்கு ஏன் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More News

பின்னணி இசைக்காக பாராட்டுகளை அள்ளி குவிக்கும் இசை அமைப்பாளர் சாம் சி எஸ்

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் சாம் சிஎஸ் பாடல்களில் மட்டுமின்றி பின்னணி இசையிலும் கலக்கி வருகிறார். 'விக்ரம் வேதா' மூலம் பிரபலமாக ஆரம்பித்த இவரது இசை

தனுஷின் 20 வருட பயணம்: 'வாத்தி' படக்குழு வெளியிட்ட மாஸ் போஸ்டர்

நடிகர் தனுஷ் கடந்த 2002 ஆம் ஆண்டு 'துள்ளுவதோ இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அவர் திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆகி உள்ளதை அடுத்து

கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டேன்: 10வது திருமண நாள் விழாவில் சினேகாவின் பதிவு

நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து 10 ஆண்டுகள் நிறைவானதை அடுத்து ரொமான்ஸ் பதிவும், கலக்கலான புகைப்படங்களையும் பதிவு செய்துள்ள நிலையில் அவை தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

'ஏகே 61'  படத்தில் இணைந்த சூப்பர்ஹிட் படத்தின் ஹீரோ!

தமிழில் சூப்பர் ஹிட்டான படத்தின் ஹீரோ ஒருவர் அஜித்தின் அடுத்த படமான 'ஏகே 61' படத்தில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சன்னிலியோனுக்கு முதுகு மசாஜ் செய்தவர் யார் தெரியுமா? வைரல் வீடியோ

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு முதுகு மசாஜ் செய்துவிடும் நபரின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.