close
Choose your channels

'லைஃப் டைம் செட்டில்மெண்ட்' லோகேஷூக்கு கமல் கொடுத்த விலைமதிப்புள்ள பரிசு!

Tuesday, June 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ படத்தை இயக்கிய தனக்கு லைப்ஸ்டைல் செட்டில்மெண்ட் என்று லோகேஷ் கனகராஜ் கூறிய நிலையில் அவருக்கு விலை மதிப்புள்ள கார் ஒன்றை கமல்ஹாசன் பரிசளித்துள்ளார்.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் அது மட்டுமின்றி 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் பல தமிழ் சினிமா வசூல் சாதனையை முறியடிக்கும் என்றும் டிரேங் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜூக்கு தனது கைப்பட வாழ்த்து கடிதம் எழுதியதை அடுத்து கமல் அவர்களை இயக்கியது தனக்கு ’லைஃப் டைம்’ செட்டில்மெண்ட் என்றும் வாழ்க்கையில் தன்னால் இந்த படத்தை மறக்கவே முடியாது என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது லைஃப் செட்டில்மெண்ட் லோகேஷுக்கு லெக்சஸ் கார் ஒன்றை கமல்ஹாசன் பரிசாக அளித்துள்ளார். 60 லட்சம் முதல் 2 கோடி வரை மதிப்புள்ள கார்களை லெக்சஸ் நிறுவனம் விற்பனை செய்துவரும் நிலையில் இவற்றில் எந்த காரை கமல்ஹாசன் பரிசளித்தார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.