கனிமொழியின் கல்விக்கட்டணத்திற்கு உதவிய கமல்ஹாசன்
உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் கூலி வேலைக்கு சென்ற மாணவி ஒருவரின் முழு கல்விச்செலவையும் பொறுப்பேற்றுள்ளார்.
அரியலூர் மாணவி கனிமொழி என்பவர் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இவர் தன்னுடைய கல்விக்கட்டணத்திற்காக கூலி வேலை செய்து வருவதாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளிவந்தது. இந்த செய்தியை அறிந்த கமல்ஹாசன் உடனே தனது சகோதரர் சந்திரஹாசன் அறக்கட்டளை மூலம், மாணவி கனிமொழியின் கல்விச்செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் இந்த உதவிக்கு மாணவி கனிமொழியும் அவரது குடும்பத்தினர்களும் நேரில் அவரை சந்தித்து நன்றி கூறினர். கமல்ஹாசனின் இந்த உதவியை சமூக வலைத்தள பயனாளிகள் பாராட்டி வருகின்றனர்.