close
Choose your channels

இந்த சீசனில் ஒரு வித்தியாசம், அதன் விளைவுகள் என்ன? கமல்ஹாசன் டுவிஸ்ட்!

Saturday, December 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று காலை டிஸ்சார்ஜ் ஆனார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புரமோவும் வந்து விட்டது. இந்த வீடியோவில் ’உங்கள் அன்பினால் மட்டுமே மீண்ட நான், இன்று உங்களுடன் மீண்டும் நான், இனி என்றுமே உங்கள் நான்’ என்று கூறிய கமல் ஹாசன் இந்த சீசன் குறித்து கூறிய போது ’இந்த சீசனை பொருத்தவரை நான் வெளியிலிருந்து பார்க்கும்போது எனக்கு தெரிந்தது இம்முறை எல்லோரும் தனித்தனியே விளையாடுகிறார்கள், அவர்களுக்கு என்று ஒரு யுக்தியும் திட்டமும் இருக்கின்றது. அதன் விளைவுகளை இன்று இரவு பார்ப்போம் என்று டுவிஸ்ட் வைத்து கூறுவதுடன் இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது.

நாம் ஏற்கனவே கூறியபடி இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றும் நாளையும் கேப்டன் டாஸ்க்கின்போது நிரூப்-இமானுக்கு ஏற்பட்ட பிரச்சனை அதன்பின் தாமரை-பிரியங்கா, பிரியங்கா-நிரூப் ஆகியோர்களுக்கு இடையே நடந்த பிரச்சனை குறித்து கமல் கலந்தாலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.