close
Choose your channels

ஒருசில மாற்றங்களுடன் மீண்டும் ரிலீஸாகும் 20 வருடத்திற்கு முந்தைய கமல் படம்!

Monday, April 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் 20 வருடங்களுக்கு முன் நடித்த திரைப்படம் ஒன்று ஒருசில மாற்றங்களுடன் மீண்டும் ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கலைப்புலி தாணு தயாரிப்பில் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’ஆளவந்தான்’. சைக்கோ மற்றும் கமாண்டர் ஆகிய இரண்டு வித்தியாசமான வேடங்களில் கமல்ஹாசன் நடித்து இருந்தார் என்பதும் ரவீனா டாண்டன் இந்த படத்தின் நாயகியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் 20 வருடங்களுக்கு முன்பே கிராபிக்ஸ் காட்சிகள் அற்புதமாக இருந்தன என்பதும் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக இந்த படம் தேசிய விருது பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த படம் ரிலீஸானபோது வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்பதும் தயாரிப்பாளர் தாணு அவர்களுக்கு இந்த படத்தால் ஏகப்பட்ட நஷ்டம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு சில மாற்றங்களை செய்து மீண்டும் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் தாணு முடிவு செய்து இருப்பதாகவும் இந்த முறை கண்டிப்பாக இந்த படம் மிகச்சிறந்த அளவில் வெற்றிபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் ரிலீஸான நேரத்தில் ஓடவில்லை என்றாலும் அதன் பின்னர் இந்த படத்திற்கு மிகப்பெரிய மரியாதைகள் கிடைத்தன என்பது குறிப்பாக பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் ’ஆளவந்தான்’படத்தை பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆகி தான் ஒரு சில காட்சிகளை தன்னுடைய படத்தில் வைத்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.