close
Choose your channels

கமலஹாசனின் அடுத்த படம்.. சூப்பர் அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்..!

Sunday, April 13, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தக்லைப்' என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இந்தியன் 3' திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அதுமட்டுமின்றி, 'கல்கி 2898 ஏடி' என்ற படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், கமல்ஹாசன் நடிப்பில் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த படம் குறித்த அறிவிப்பு தான் வெளியாகியுள்ளது. கமல்ஹாசனின் 237வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் பணிகள் தொடங்கி விட்டதாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் ஒரு புதிய ஸ்டில் உடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கமல்ஹாசன் உடன் அன்பறிவ் ஆகிய இரண்டு மாஸ்டர்களும் இடம் பெற்றிருக்கும் காட்சி உள்ளது. இதனை அடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment