கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த மாஸ் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,May 09 2022]

உலகநாயகன் கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த மாஸ் அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உருவாகியுள்ள ’விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே தினத்தன்று சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தை தயாரிப்பதாக கமலஹாசன் அறிவித்திருந்தார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகி அல்லது இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் 51-வது படமாகும் சிவகார்த்திகேயனின் 21வது படமாகவும் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பிரபல ஹீரோவை கட்டிப்பிடித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய சமந்தா!

 பிரபல ஹீரோவை கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய சமந்தாவின் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது .

முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்த பிரியங்கா சோப்ரா!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற நிலையில் இந்த குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் .

'வேற லெவலில் பாடல்கள்”: 'தளபதி 66' இசை குறித்து தமன்!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66'  படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் கம்போஸ் செய்யும் பணியில் இசையமைப்பாளர் தமன் ஈடுபட்டு வருகிறார் .

நடிகை சிம்ரனுக்கு எவ்வளவு பெரிய மகன்களா? வைரல் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக கடந்த 2000ம் ஆண்டுகளில் இருந்த சிம்ரனின் மகன்கள் குறித்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகன்களா?  என்று ரசிகர்கள்

பிரபுவை அடுத்து 'தளபதி 66' படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 66' திரைப்படத்தில் நடிகர் பிரபு இணைந்தார் என்ற செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து