கமல்ஹாசனின் 'விக்ரம்' படக்குழுவினர் வெளியிட்ட மாஸ் வீடியோ!

  • IndiaGlitz, [Monday,May 09 2022]

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக ரயில்களில் இந்தப் படத்தின் போஸ்டர்கள் வரையப்பட்டு வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் மாஸ் வீடியோ ஒன்றை சற்றுமுன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 20 நொடிகள் மட்டுமே இந்த வீடியோவில் இரண்டு பக்கமும் துப்பாக்கிகளால் சுடும் காட்சிகளும் தோட்டாக்கள் பறக்கும் காட்சிகளும் உள்ளன. மேலும் ‘விக்ரம்’ திரைப்படம் வெளியாக இன்னும் 25 நாட்களே உள்ளன என்ற தகவலும் இந்த வீடியோவில் உள்ளது

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட உள்ளது என்பது தெரிந்ததே.

More News

ரம்யா பாண்டியனுக்கு சவால் விடும் ஜூலி: வைரல் வீடியோ

ரம்யா பாண்டியனுக்கு சவால் விடும் வகையில் பிக் பாஸ் ஜூலி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் மொத்த வசூல் இவ்வளவா? ஆச்சரிய தகவல்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான 'காத்துவாக்குல ரெண்டு காதல்'  என்ற திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது

சித்ரா தங்கியிருந்த அறையில் காண்டம்கள்: திடுக்கிடும் தகவல் அளித்த தோழி

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தங்கியிருந்த அறையில் காண்டம்கள் இருந்ததை நானே பார்த்து உள்ளேன் என்று அவரது தோழி ரேகா நாயர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன 'நண்பன்' பட நடிகை: வைரலாகும் செல்பி வீடியோ

விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'நண்பன்' திரைப்படத்தில் நடித்த நடிகை ஆளே அடையாளம் தெரியாமல் மாறி வெளியிட்டுள்ள செல்பி வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது .

கணவரை பிரிந்து மனவேதனையில் இருக்கின்றேன்: பிரபல சீரியல் நடிகை!

பிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஒருவர் தனது கணவரை பிரிந்து மனவேதனையில் இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.