close
Choose your channels

கமல்ஹாசனின் 'விக்ரம்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

Saturday, June 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமலஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் நேற்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படத்தின் முதல் காட்சி முடிந்தவுடன் பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியது என்பதையும் பார்த்தோம். ஊடகங்கள், சமூக ஊடகங்கள் ‘விக்ரம்’ படத்தை கொண்டாடி வருகின்றன என்பதும் அனைத்து பாசிட்டிவ் விமர்சனங்களால் இந்த படத்தின் வசூல் சாதனை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முதல் நாளில் ‘விக்ரம்’ திரைப்படம் செய்த வசூல் எவ்வளவு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளிலும் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும், அதில் தமிழகத்தில் மட்டும் 34 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

நேற்று கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் ஆகிவிட்ட நிலையில் வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் நல்ல வசூல் செய்யும் என்றும், பாசிட்டிவ் விமர்சனம் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை எட்டுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுவரை வெளியான கமல்ஹாசன் படங்களிலேயே இந்த படம்தான் அதிக ஓபனிங் வசூல் குவித்த படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.