close
Choose your channels

கமல்ஹாசனுக்குக் பிறந்த நாள் ட்ரீட் கொடுத்த லோகேஷ்: 'விக்ரம்' போஸ்டர் ரிலீஸ்!

Friday, November 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் நாளை மறுநாள் கமல்ஹாசனின் பிறந்த நாளை அடுத்து ’விக்ரம்’ பட குழுவினர் ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று கமல் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த வகையில் சற்றுமுன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ’விக்ரம்’ படத்தின் அட்டகாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்

கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு கமல் கண் மூடி நிற்கும் காட்சியும் பின்னணியில் நெருப்பு குழம்புகள் இருக்கும் காட்சியும் இருப்பதை பார்க்கும் போது இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அனிருத் இசையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.