close
Choose your channels

பிறப்பு முதல் இறப்பு வரை, எந்தெந்த சேவைக்கு எவ்வளவு லஞ்சம்: பட்டியலிட்ட கமல்ஹாசன்!

Monday, December 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவ்வப்போது அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களிலும் ஆளும் அதிமுக அரசின் ஊழல்களை பற்றி டுவிட்டுக்களை பதிவு செய்து வருகிறார்

இந்த நிலையில் பிறப்பு முதல் இறப்பு வரை எந்தெந்த சேவைக்கு எவ்வளவு லஞ்சம் என்ற பட்டியலிட்டு ஒரு அட்டவணையை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் இந்த டுவிட்டில் ’பிறப்பு முதல் இறப்பு வரையிலான சான்றிதழ்களுக்கும், சேவைகளுக்கும் தமிழகம் முழுக்க நடைமுறையில் இருக்கும் லஞ்சப் பட்டியல் இது. மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா? மறக்க முடியுமா? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி #நான்_கேட்பேன் என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்துள்ளார்.

கமல்ஹாசனின் இந்த பட்டியலுக்கும் அவருடைய குற்றச்சாட்டுகளுக்கும் ஆளும் தரப்பிலிருந்து என்ன பதில் அளிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.