close
Choose your channels

ஒரே ஒரு காட்சியில் நடித்து பிரபலமான மதுரை பொண்ணு: தொடர்கிறது 'விக்ரம்' மேஜிக்!

Saturday, June 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தாலும் ஒவ்வொரு முறை பார்க்கும்போது புதுப்புது அனுபவங்கள் ஏற்படுவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகிய மூவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருந்தாலும் இந்த படத்தில் ஒருசில காட்சியில் நடித்தவர்கள் கூட படம் முடிந்து வெளியே வரும்போது மனதில் ஆழமாக பதிந்துள்ளதே இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி என்று எடுத்து கொள்ளலாம்.

அந்த வகையில் ‘விக்ரம்’ படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்தவர் நடிகை மாயா கிருஷ்ணன். மதுரை பெண்ணான இவர் பகத் பாசில் மற்றும் கமல்ஹாசனுடன் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே நடித்திருந்தார். ஆனால் அந்த காட்சிக்கு மிகப்பெரிய அளவில் மக்களின் வரவேற்பு கிடைத்த நிலையில் அவர் சமூக வலைதளங்களில் பிரபலம் அடையும் அளவுக்கு மாறிவிட்டார்.

ஏற்கனவே நடிகை மாயா கிருஷ்ணன் தனுஷின் ‘தொடரி’, சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ உள்பட பல படங்களில் நடித்திருந்தாலும் ‘விக்ரம்’ படத்தில் நடித்த ஒரு காட்சி தான் அவரை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் ’சர்வர் சுந்தரம்’ ’துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.