ஆஸ்திரேலியா அமைச்சருடன் கமல்ஹாசன் முக்கிய ஆலோசனை: இதுதான் காரணம்!

  • IndiaGlitz, [Tuesday,July 19 2022]

உலகநாயகன் கமல்ஹாசன் ஆஸ்திரேலிய அமைச்சருடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அவர் எதற்காக ஆஸ்திரேலிய அமைச்சரை சந்தித்தார் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இந்த படம் மிகப்பெரிய சாதனை செய்து உள்ளது என்பதும் ரஜினியின் ‘2.0’ படத்தை அடுத்து ஆஸ்திரேலியாவில் அதிக வசூல் செய்த தமிழ் படம் ’விக்ரம்’ தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ள நிலையில் இந்த படத்தின் சில பகுதி படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற ஆஸ்திரேலியா அமைச்சரை கமல் சந்தித்ததாகவும் கமலஹாசனுக்கு ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆஸ்திரேலியாவில் தனது KH நிறுவனத்தின் கதர் தயாரிப்பு ஆடைகளை விற்பனை செய்வது குறித்தும் அவர் ஆஸ்திரேலிய அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

கமலஹாசன் ஆஸ்திரேலிய அமைச்சர்களை சந்தித்தப் புகைப்படம் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

காபி வித் காதல் ; யுவனின் இசையில் வெளியான பேபி கேர்ள் ஆல்பம்

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் 'காபி வித் காதல். இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான

ஹாட்ஸ்டாரில் வெளியாகும் சிபிராஜின் அடுத்த படம்:  24 மணி நேரத்தில் சந்திக்கும் த்ரில் கதை!

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான சிபிராஜ் நடிக்கும் அடுத்த திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

வெறித்தனமான வொர்க்-அவுட்டால் வேற லெவலுக்கு மாறிய விஜய் டிவி ஜாக்குலின்: வைரல் வீடியோ

விஜய் டிவியில் 'கலக்கப்போவது யாரு' உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி ஜாக்குலின் தற்போது விஜய் டிவியில் பெரிய அளவில் தலை காட்டவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில்

கணவருக்கு முத்தம், கடல் தண்ணீரில் நனையும் மகனின் கால்: காஜல் அகர்வாலின் வைரல் வீடியோ

நடிகை காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில் தற்போது முதல் முறையாக தனது குழந்தையை கோவாவிற்கு அவர் அழைத்துச் சென்றுள்ளார். குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள

கமல்-லோகேஷ் கூட்டணியில் ரஜினி: ஆனால் ஒரு பெரிய திருப்பம்!

உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்தி வெளியானது.