close
Choose your channels

அமெரிக்காவில் கமல் சந்தித்த பிரபலம் யார் தெரியுமா? முழு வீச்சில் 'இந்தியன் 2' பணிகள்!

Monday, August 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் இந்த படத்தின் மேக்கப் உள்ளிட்ட ஒரு சில பணிகளுக்காக கமல்ஹாசன் கடந்த சில நாள்களுக்கு முன் அமெரிக்கா சென்று இருந்தார் என்பதும் அங்கு அவர் ‘இந்தியன் 2’ பணிகளை கவனித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகலின்படி கமல்ஹாசன் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி மேக்கப் கலைஞர் மைக்கேல் வெஸ்ட்மோர் என்பவரை சந்தித்து அவரது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகப் புகழ்பெற்ற மேக்கப்மேன் மைக்கேல் வெஸ்ட்மோர், ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த ’தசாவதாரம்’ திரைப்படத்திற்கு மேக்கப் கலைஞராக பணி செய்துள்ளார் என்பதும் இதனை அடுத்து தற்போது ‘இந்தியன் 2’ படத்திற்கு மீண்டும் மேக்கப் செய்ய வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தை விரைவில் முடிக்க படக்குழுவினர் தீவிர முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.