நயன்தாராவின் உயிர், உலகம் ஸ்டைலில் பெயர் வைத்த கமல்.. சினேகன் - கன்னிகா மகிழ்ச்சி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை நயன்தாரா, தனது இரட்டை குழந்தைகளுக்கு "உயிர்" மற்றும் "உலகம்" என்று பெயர் வைத்திருந்தார். அதேபோல், கவிஞர் சினேகன் - நடிகை கன்னிகா ஜோடியின் இரட்டை குழந்தைகளுக்கும் உலகநாயகன் கமல்ஹாசன் பெயர் வைத்துள்ளார்.
கவிஞர் சினேகன், சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு கமல்ஹாசன் தலைமையேற்று நடத்தி வைத்தார் என்பதும் தெரிந்த செய்தி.
சமீபத்தில், சினேகன் - கன்னிகா ஜோடிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. இதற்கான மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட சினேகன், அந்த குழந்தைகளுக்கு "காதல்" மற்றும் "கவிதை" என கமல்ஹாசன் பெயர் வைத்ததாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சினேகன்,தனது இன்ஸ்டா பதிவில் கூறியிருப்பதாவது:
காதலர் தினத்தில் ...
எங்கள் தங்க மகள்களுக்கு
தங்க வளையல்களோடு ...
"காதல்" கன்னிகா சினேகன் என்ற பெயரையும்
"கவிதை " கன்னிகா சினேகன் என்ற
பெயரையும் ..
அணிவித்து வாழ்த்திய, நம்மவர் எங்களின் அன்பு தலைவர் பத்ம பூஷன் கமல்ஹாசன் கமல்ஹாசன் அவர்களுக்கு எங்கள் அன்பின் நன்றிகள்
நீங்களும் வாழ்த்துங்கள் எங்கள்
காதல் - கவிதை-யை
இந்த பதிவுக்கு நெட்டிசன்கள், ‘நயன்தாரா ஸ்டைலில், சினேகன் குழந்தைகளுக்கு கமல்ஹாசன் பெயர் வைத்துள்ளார்!" என கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com