உலக நாயகன் கமல்ஹாசன் அடுத்த படத்தின் மாஸ் போஸ்டர்.. இணையத்தில் வைரல்..!

  • IndiaGlitz, [Wednesday,October 11 2023]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க உள்ள அடுத்த படத்தின் மாஸ் போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ’இந்தியன் 2’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் கமல்ஹாசன் அடுத்ததாக பிரபாஸ் நடிக்க இருக்கும் 'கல்கி 2898 ஏடி’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ள இந்த படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என ஆறு மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது. ’நடிகையர் திலகம்’ என்ற படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படம் உருவாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை அடுத்து அவரது கேரக்டரின் மாஸ் போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் அமிதாப்பச்சன் இணைவதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம் என்று படக்குழுவினர் பதிவு செய்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

அஜித் நடிக்க இருக்கும் அடுத்த பட இயக்குனர் இவரா? வாய்ப்பு இருக்கிறதா?

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன.

தனுஷின் 'கேப்டன் மில்லர்'.. சிவராஜ்குமாருக்காக செய்யப்படும் புதிய மாற்றம்..!

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரமும்

இந்த வார எலிமினேஷனில் திடீர் திருப்பம்.. எதிர்பாராத டிவிஸ்ட்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்களில் ஒருவர் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில்

'லியோ' சிறப்பு காட்சி குறித்து தமிழக அரசின் உத்தரவு.. அதிகாலை காட்சி உண்டா?

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்ற நிலையில் 'லியோ' திரைப்படத்திற்கு தமிழக அரசு அதிகாலை காட்சிக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'லியோ' புரமோஷன் நிகழ்ச்சி.. துபாய்க்கு பதில் இந்த இந்திய நகரத்திலா? ரசிகர்கள் குஷி..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி துபாயில் நடத்த இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது துபாய்க்கு பதில் ஒரு இந்திய நகரத்தை படக்குழுவினர் தேர்வு செய்திருப்பதாக