close
Choose your channels

இன்று கமல்ஹாசனின் புதிய பட அறிவிப்பு வெளியாகிறதா? ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்

Sunday, June 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ’இந்தியன் 2’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தில் உள்ளது என்பது தெரிந்ததே. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த படம் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘இந்தியன் 2’ படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் கமல்ஹாசனின் 234வது திரைப்படத்தை மணிரத்னம் இயக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிரபாஸ் நடிக்க இருக்கும் ’புராஜெக்ட் கே’ என்ற திரைப்படத்தில் வில்லனாக கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும் அதற்காக அவருக்கு மிகப்பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் 'புராஜெக்ட் கே’ படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பது குறித்த அறிவிப்பு இன்று அதிகாரபூர்வமாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் 'புராஜெக்ட் கே' படத்தின் கமல்ஹாசன் ஸ்டில் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.