டெல்லியில் 'தக்லைஃப்' படப்பிடிப்பு.. கமல்ஹாசனுடன் யார் யார்? இன்று ஒரு சர்ப்ரைஸ் இருக்குது..!

  • IndiaGlitz, [Monday,May 06 2024]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது டெல்லியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக செய்திகள் வெளியானது.

கடந்த சில வாரங்களாக தேர்தல் பணி காரணமாக ‘தக்லைஃப்’ படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொள்ளாத நிலையில் அவர் இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு நடந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் பணி முடிந்தவுடன் ‘தக்லைஃப்’ படத்திற்காக ஒரு பாடலை எழுதி முடித்த கமல்ஹாசன் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக டெல்லி சென்றுள்ளதாகவும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும் டெல்லி படப்பிடிப்பின் போது கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் கசிந்து உள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் கமல்ஹாசன் உடன் சிம்பு ,மிர்சாபூர் நடிகர் அலி ஃபைசல், நாசர், நடிகர் வையாபுரி உள்ளிட்டோர் இருக்கும் நிலையில் இவர்களுடன் தான் இன்றைய படப்பிடிப்பு நடைபெறும் என்றும் தெரிகிறது. அது மட்டுமின்றி இந்த புகைப்படத்தின் மூலம் கமல்ஹாசனின் கெட்டப் கசிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் சிம்பு இணைந்ததை அடுத்து அது குறித்த பிரமோ வீடியோ இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இன்று ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில், ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகி வருகிறது.

More News

த்ரிஷா பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் செய்த தரமான சம்பவம்.. வைரல் வீடியோ..

நடிகை த்ரிஷா பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் செய்த தரமான சம்பவம் குறித்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

குமரிமுத்து பேட்டியின் வீடியோவை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்.. என்ன சொல்ல வருகிறார்?

மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அளித்த பேட்டியின் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார்

'தல ரஜினி இன்னும் மாறவே இல்லை.. ரஜினி எப்போ 'தல' ஆனார்.. பிரபலத்தின் பதிவு..!

'தல ரஜினிகாந்த் இன்னும் மாறவே இல்லை என்றும் அவர் கிரேட்டஸ்ட் நபர்' என்று பிரபலம் ஒருவர் தான் அது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் 'ரஜினி எப்போ தல ஆனார்' என்று ரசிகர்கள் கேள்வி

'நடக்க வேண்டிய நேரத்துல கரெக்டா நடக்கும்.. ரஜினியின் 'கூலி' படத்தின் மாஸ் அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் முக்கிய பணியாற்றும் ஒருவர் மாஸ் அப்டேட் கொடுத்த

குஷ்பு அக்காவுக்கு எனது நன்றி.. மாஸ் வீடியோவை வெளியிட்ட சிம்ரன்..!

குஷ்பு அக்காவுக்கும், சுந்தர் சி சார் அவர்களுக்கும் நன்றி என நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.