ரஜினியை அடுத்து கமல் எடுத்த அதிரடி நடவடிக்கை: பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Monday,November 30 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று அரசியல் கட்சி குறித்த தெளிவான ஒரு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் ’விரைவில் அரசியல் குறித்த நிலைப்பாட்டை தெரிவிப்பதாக கூறினார். இதனால் ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும் அவர் விரைவில் அரசியல் குறித்த முடிவை அறிவிப்பார் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்

இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று தனது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த நிலையில், நாளை உலக நாயகன் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சியின் அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்திக்கிறார் என்றும் வருகை தரும் பத்திரிகையாளர்கள் அனைவரும் கோவிட் விதிமுறைகளை பின்பற்றுமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது

நாளைய செய்தியாளர் சந்திப்பில் கமல்ஹாசன் ஒரு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் இன்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்துவிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய நிலையில், நாளை கமலஹாசனும் செய்தியாளர்களை சந்திக்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

நயன்தாராவின் அடுத்த பட படப்பிடிப்பு எப்போது?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் அவர் தற்போது 'நிழல்' என்ற மலையாளத் திரைப்படத்தில்

கடன் தொல்லை, குடும்பமே தற்கொலை, அதிலும் ஒரு மனிதாபிமானம்: மதுரையில் அதிர்ச்சி 

மதுரை அருகே கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை செய்துகொண்ட நிலையில் மனிதாபிமானமாக வளர்ப்பு குழந்தையை மட்டும் தற்கொலை செய்யாமல்

தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட அஜித்-விஜய் பட நடிகை!

அஜித், விஜய் படங்களில் நடித்த நடிகை ஒருவர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது 

வயலில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த 110 விவசாயிகள் படுகொலை… பயங்கரவாதிகள் அட்டூழீயம்!!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் ஒரு பண்ணைத் தோட்டத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த 110 விவசாயிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியால் பாதிப்பா??? 5 கோடி நஷ்டஈடு கேட்ட சென்னை நபர்… சீரம் நிறுவனத்தின் பதில்!!!

ஆக்ஸ்போர்ட் மற்றும் அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் இரண்டும் இணைந்து தயாரித்த கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி நல்ல பலனைக் கொடுப்பதாக அதன் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.