பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தயாரிக்கின்றாரா?

  • IndiaGlitz, [Friday,June 18 2021]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே 4 சீசன்கள் முடிவடைந்து விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை எண்டமோல் ஷைன் என்ற நிறுவனம் இதுவரை வழங்கி வந்த நிலையில் திடீரென கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தி குறித்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியை எண்டமோல் ஷைன் என்ற நிறுவனம்தான் உலகம் முழுவதும் காப்பிரைட் பெற்று நடத்தி வருகிறது. இந்தியாவிலும் தமிழ் ஹிந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்பட பல மொழிகளில் இந்த ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எண்டமோல் ஷைன் நிறுவனத்தை Banijay என்ற பிரெஞ்சு நிறுவனம் விலைக்கு வாங்கி விட்டதாகவும் இதனை அடுத்து எண்டமோல் நிறுவனம் காப்பிரைட் பெற்றுள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் Banijay நிறுவனத்திற்கு கை மாறி விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஏற்கனவே Banijay நிறுவனத்துடன் விஜய் டிவி சில தொடர்களை தயாரித்து வரும் நிலையில் தற்போது Banijay நிறுவனத்துடன் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து ஓடிடி பிளாட்பாரத்திற்காக வெப்தொடர்கள் தயாரிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதை வைத்துதான் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவை Banijay மற்றும் கமல்ஹாசன் இணைந்து தயாரிக்க போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த செய்தி முழுக்க முழுக்க தவறானது என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியை Banijay நிறுவனம்தான் நடத்தப் போகிறது என்றும் அதன் உரிமை அந்த நிறுவனத்திடம் மட்டும்தான் உள்ளது என்றும், இந்நிகழ்ச்சியை பொருத்தவரை கமல்ஹாசன் ஒரு தொகுப்பாளர் மட்டும் தான் என்றும், 100 நாள் நிகழ்ச்சியில் அவரது கால்ஷீட் 20 நாள்கள் மட்டுமே இருக்கும் என்றும், மற்றபடி இந்த நிகழ்ச்சியின் தயாரிப்புக்கும் கமல்ஹாசனுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.