கமல்ஹாசன் வெளியிட்ட தங்கர் பச்சானின்  'கருமேகங்கள் கலைகின்றன' முதல் தோற்றம்! 

  • IndiaGlitz, [Monday,March 06 2023]

தமிழ் திரையுலகில் மாறுபட்ட வாழ்வியல் படைப்புகளால், மக்கள் மனங்களை வென்ற இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு மனித வாழ்வியலை சொல்லும் அழுத்தமாக படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் கருமேகங்கள் கலைகின்றன”. பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகிபாபு முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தின் முதல் தோற்றத்தை உலக நாயகன் கமலஹாசன் இன்று வெளியிட்டார்.

உலக நாயகன் கமலஹாசன் அவரது அலுவலகத்தில் இன்று இப்படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டார். அப்போது பாரதிராஜா, இயக்குநர் தங்கர்பச்சான் , தயாரிப்பாளர் டி. துரை வீரசக்தி ஆகியோர் உடனிருந்தனர். பாரதிராஜா இப்படம் தமிழ் திரை வரலாற்றில் மிக முக்கியமான படைப்பாக இருக்குமென்று கமல்ஹாசனிடம் கூறினார்.

படம் குறித்து நடிகர் கமலஹாசன் இயக்குநர் தங்கர் பச்சானிடம் கூறுகையில், ‘தமிழ் சினிமாவின் பெருமை மிகு படைப்பாளி பாரதிராஜா ஒரு படைப்பை இந்த அளவு புகழ்ந்து பார்த்ததில்லை. இப்படத்தில் நடித்த பிறகு தான் ஓய்வுபெற்று விடலாம் என்று சொல்லும் அளவுக்கு அவர் கூறியது எனக்கு பேராச்சர்யம். இப்பொழுதே உடனடியாக படம் பார்க்கும் ஆவல் வந்துவிட்டது. விரைவில் படத்தை காட்டுங்கள் என்றார். மேலும் , இயக்குநர் தங்கர் பச்சானுக்கும், தயாரிப்பாளர் டி. துரை வீரசக்திகும் மற்றும் படக்குழுவினருக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மண்சார்ந்த மென்மையான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் தோற்றம் இணையம் முழுக்க பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் படத்தின் பின்னணி இசை பணிகளை செய்கிறார் . விரைவில் படத்தின் டீசர் வெளிவருமென தயாரிப்பு குழு அறிவித்துள்ளது.

பாரதிராஜா, அதிதி பாலன், கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு, மஹானா, சஞ்சீவி, எஸ்.ஏ.சந்திர சேகர், ஆர்.வி.உதயகுமார், பிரமிட் நடராஜன், டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். N.K.ஏகாம்பரம் ஒளிப்பதிவில் பி.லெனின் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

அம்மா மகளா? அக்கா தங்கையா? லைக்ஸ்களை குவிக்கும் கெளதமியின் புகைப்படங்கள்..!

 நடிகை கெளதமி தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இது அம்மா மகளா? அல்லது அக்கா தங்கையா? என ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

எங்கள் குட்டி சாம்ராஜ்யத்தை உருவாக்க தொடங்குகிறோம்: மணிமேகலை அறிவிப்பு..!

 எங்கள் குட்டி சாம்ராஜத்தை உருவாக்க தொடங்குகிறோம் என குக் வித் கோமாளி மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

நீச்சல் குளத்தில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.. காஜல் அகர்வாலின் க்யூட் வீடியோ..!

 நடிகை காஜல் அகர்வால் நீச்சல் குளத்தில் தனது செல்ல மகனுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபடும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 

அஜித்தின் அடுத்த புரொஜக்ட்.. டைட்டிலை அறிவித்த சுரேஷ் சந்திரா..!

 அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் 'ஏகே 62' என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தை அடுத்து உலக அளவில் பைக் சுற்றுலா செல்ல இருப்பதாகவும் அதன் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்

அம்மாவின் பிறந்த நாளில் அமலாபால் செய்த வேலையை பாருங்க.. வைரல் வீடியோ..!

நடிகை அமலாபால் தனது அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு செய்த செயலின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.