80s நடிகைகளுடண் 'பதான்' படம் பார்த்த கமல்ஹாசன்.. யார் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,February 07 2023]

80s நடிகைகளுடன் உலகநாயகன் கமலஹாசன் ‘பதான்’ திரைப்படத்தை பார்த்த புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஷாருக்கான் நடித்த ‘பதான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.700 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில வருடங்களாக முன்னணி பாலிவுட் நடிகர்களின் படங்கள் தோல்வியடைந்து வரும் நிலையில் ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் வெற்றி பெற்றுள்ளதால் பாலிவுட் திரையுலகிற்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்த நிலையில் ‘பதான்’ திரைப்படத்தை பல திரையுலக பிரபலங்கள் பார்த்து வாழ்த்து தெரிவித்தனர் என்பதும், குறிப்பாக கமலஹாசன் ‘பதான்’ திரைப்படம் ரிலீஸ் ஆன தினத்தில் இந்த படம் வெற்றி அடைய தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ‘பதான்’ திரைப்படத்தை சமீபத்தில் கமலஹாசன் பார்த்து உள்ளார். அவருடன் அவருடைய அண்ணன் மகளும் நடிகையுமான சுஹாசினி, 80s நடிகைகளான ஷோபனா மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோர் ‘பதான்’ படத்தை பார்த்துள்ளனர். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் மற்றும் ஷோபனா ஆகிய இருவரும் கடந்த 1984ஆம் ஆண்டு வெளியான ‘எனக்குள் ஒருவன்’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

இன்று 4ஆம் நாள் சிகிச்சை.. காயம் குறித்து அருண்விஜய் வெளியிட்ட புகைப்படம்!

 தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண்விஜய் சமீபத்தில் காயம் அடைந்த நிலையில் தற்போது அவர் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். 

பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத போட்டியாளர்.. என்ன காரணம்?

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசன் முடிவடைந்த உடன் பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள கொண்ட அனைத்து

விஜய் டிவி கோபிநாத்தின் திருமண புகைப்படங்கள்.. இணையத்தில் வைரல்..!

விஜய் டிவியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக 'நீயா நானா' என்ற ரியாலிட்டி ஷோவை நடத்திவரும் கோபிநாத்தின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

'லியோ' காஷ்மீர் படப்பிடிப்பில் இருந்து த்ரிஷா திரும்பவில்லை.. சொன்னது யார் தெரியுமா?

தளபதி விஜய் நடித்துவரும் 'லியோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்புக்கு விஜய் உடன் சென்றிருந்த த்ரிஷா 3 நாட்களில் சென்னை திரும்பி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கமல்ஹாசனை திடீரென சந்தித்த விக்ரமன்.. என்ன காரணம்?

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக விக்ரமன் தான் தேர்வு செய்யப்படுவார் என அனைவரும் நம்பிக்கொண்டிருந்த நிலையில் திடுக்கிடும்