எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. இந்த வார எவிக்சன் குறித்து கமல்ஹாசன் பரபரப்பு தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,December 03 2023]

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர் வெளியேற்றப்படுவார் என்ற நிலையில் இந்த வாரம் மூவரில் ஒருவர் வெளியேற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மணி, ஜோவிகா மற்றும் விக்ரம்.

இந்த நிலையில் இவர்களில் யார் வெளியே போவார்கள் என்று நினைக்கிறீர்கள் என்று கமல்ஹாசன் சக போட்டியாளர்களிடம் கேட்டபோது விக்ரம் போவார் என்று தினேஷ் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் கூறுகின்றனர். விஜய் வர்மா மற்றும் மாயா ஆகிய இருவரும் ஜோவிகா போக வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.

இந்த நிலையில் கூல் சுரேஷ் எழுந்து ’நாங்கள் ஒரு பெயர் வைத்திருப்பதை விட நீங்கள் ஒரு பெயர் வைத்திருப்பீர்கள்’ என்று சொல்ல உடனே கமல்ஹாசன் ’எவிக்சன் விவகாரத்தில் எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்று கூறிவிட்டு இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்த அட்டையை காண்பிப்பதுடன் ப்ரோமோ வீடியோ முடிவுக்கு வருகிறது

இந்த நிலையில் இந்த வாரம் ஜோவிகா வெளியேறிவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளன.

More News

விஜயகாந்த் எப்படி இருக்கிறார்? சற்றுமுன் பிரேமலதா வெளியிட்ட புகைப்படம்..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது: லோகேஷ் கனகராஜின் 'ஃபைட் கிளப்' டீசர்..!

நான் பொறக்குறதுக்கு முன்னாடி பிறந்த சண்டை இது.. யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது.. வேற வேற பேர்ல, வேற வேற ஆளுங்க இங்க அடிச்சுக்கிட்டே தான் இருக்க போறாங்க..

லோகேஷ், அமீரால் முடியாததை செய்து காட்டுகிறாரா மிஷ்கின்?  'ட்ரெயின்' படத்தில் இணையும் பிரபலம்..!

பிரபல இயக்குனர் ஒருவரை நடிக்க வைக்க அமீர் மற்றும் லோகேஷ் கனகராஜ் முயற்சி செய்த போது, அது நடக்காத நிலையில் தற்போது அதை இயக்குனர் மிஷ்கின் நடத்தி காட்டி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் சில வாரங்களில் திருப்புமுனை.. பிரதீப் யாரென்று போட்டியாளர்களுக்கு தெரியும் நாள்..!

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் சில வாரங்களில் ஃபேமிலி ரவுண்டு வர இருக்கும் நிலையில் அப்போது வெளியே இருந்து வரும் போட்டியாளர்களின் உறவினர்கள் பிரதீப் குறித்து பேசுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.  

ஒரு உடல் இரண்டு உயிர்.. இது ரெண்டும் சண்டை போட்டா என்ன ஆகும்? 'ஆளவந்தான்' டிரைலர்..!

உலகநாயகன் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த 'ஆளவந்தான்' திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் ட்ரீம் செய்யப்பட்டு டிஜிட்டலில் வரும் 8ஆம் தேதி