நானும் தற்கொலை குறித்து யோசித்து இருக்கிறேன்: கமல்ஹாசன் கூறிய அதிர்ச்சி தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,September 24 2023]

20 வயதில் நானும் தற்கொலை குறித்து யோசித்து இருக்கிறேன் என உலகநாயகன் கமல்ஹாசன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை லயோலா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது மாணவர் ஒருவர் ’இளைஞர்களின் தற்கொலை குறித்த உங்கள் கருத்து என்ன? என்று கேட்டபோது ’நானும் 20, 21 வயதில் தற்கொலை குறித்து யோசித்து இருக்கிறேன். அந்த காலகட்டத்தில் எனக்கு சரியாக வாய்ப்புகள் கிடைக்காமல் ஏங்கி இருந்தேன். ஆனால் தற்கொலை எப்போதும் தீர்வாகாது என உறுதியாக நம்பினேன்.

இருள் என்பது எப்போதும் நம் வாழ்க்கையில் இருக்காது, நிச்சயம் ஒரு நாள் விடியல் வரும். அந்த விடியல் வரை கஷ்டப்பட்டு உழைத்தால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்று தெரிவித்தார்.

மேலும் மரணம் என்பது வாழ்க்கையின் ஒரு அத்தியாயம் என்றாலும், அதை நீங்கள் தேடி செல்ல வேண்டாம், அது வரும்போது வரட்டும். ஒவ்வொரு நாளும் உறங்க போகும்போது லட்சியத்தை பற்றி கனவு காண வேண்டும், அந்த லட்சியம் நிறைவேறாவிட்டாலும் பரவாயில்லை, அதற்கான அடுத்த கட்டம் என்ன என்பதை எப்பொழுதும் யோசித்துக் கொண்டே இருங்கள்’ என்று அவர் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

More News

'ஜவான்' ரிலீஸ் ஆனவுடன் ஹாலிவுட்டில் இருந்து வாய்ப்பு வந்தது: அட்லி

'ஜவான்' ரிலீசான உடன் எனக்கு ஹாலிவுட்டில் இருந்து வாய்ப்பு வந்தது என இயக்குனர் அட்லி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.  

துபாய் அல்ல, 'விடாமுயற்சி' படக்குழு செல்லும் செல்லும் நாடு இதுதான்.. படப்பிடிப்பு இத்தனை நாட்களா?

அஜித் நடிக்க இருக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு துபாயில் நடைபெறும் என்று செய்திகள் வெளியானது.

'செவ்வந்தி' சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்.. மாப்பிள்ளை இந்த பிரபலமா? திருமண புகைப்படங்கள் வைரல்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி சீரியலில் நடித்த நடிகை ஒருவர் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில் தற்போது அவருக்கு திருமணம் நடந்துள்ளது. திருமண புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல்

நான் விஜய் படத்தை இயக்கினால் தீபிகா படுகோன் தான் ஜோடி.. பிரபல நடிகர்..!

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய் உடன் நடிக்க வேண்டும் என பல நடிகைகள் ஆவலுடன் இருக்கும் நிலையில், பிரபல நடிகர் ஒருவர் நான் விஜய்யை வைத்து படம் இயக்கினால்

'எஸ்டிஆர் 48' படத்தின் ரகசிய படப்பிடிப்பு நடந்ததா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்..!

நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் 48வது திரைப்படத்தை  தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார் என்பதும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் வெளியான