close
Choose your channels

'கில்லி' ரீரிலீசை தொட முடியாத 'இந்தியன்'.. 10ல் ஒரு பங்கு தான் வசூல்..!

Sunday, June 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ’கில்லி’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படத்தின் முதல் நாள் வசூலில் 10ல் ஒரு பங்கு தான் நேற்று முன்தினம் வெளியான கமல்ஹாசனின் ’இந்தியன்’ படத்தின் ரீரிலீஸ் வசூல் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.

சமீப காலமாக பழைய சூப்பர் ஹிட் ஆன திரைப்படங்கள் ரீரிலீஸ் ஆகி வரும் நிலையில் அவற்றில் ’கில்லி’ மட்டுமே வசூல் சாதனை செய்துள்ளது என்பதும் இந்த படம் முதல் நாளில் 10 கோடி ரூபாய் வசூல் செய்தது என்றும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘இந்தியன்’ படம் நேற்று முன்தினம் ரீரிலீஸ் ஆகி முதல் நாளில் ஒரு கோடி மட்டுமே ரிலீஸ் வசூல் செய்துள்ளதாகவும் ’கில்லி’ படத்தின் முதல் நாள் வசூலில் 10ல் ஒரு பங்கு தான் வசூல் செய்துள்ளதாகவும் தெரிகிறது.

கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித் உட்பட பலர் பழைய சூப்பர் ஹிட் படங்கள் ரிலீசானாலும் கூட ’கில்லி’ படத்தின் வசூலை தொட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’கில்லி’ படம் ரீரிலீஸ் ஆகி இன்றுடன் ஐம்பதாவது நாள் ஆகி உள்ள நிலையில் இன்னும் சில திரையரங்குகளில் இந்த படம் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment