close
Choose your channels

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படப்பிடிப்பு எப்போது? படக்குழுவினர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சவால்!

Tuesday, July 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த பிரமாண்டமான திரைப்படமான ’இந்தியன் 2’ திரைப்படம் கடந்த சில ஆண்டுகளாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருக்கும் நிலையில் ’விக்ரம்’ வெற்றியால் இந்த படத்தை விரைவில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தற்போது வந்துள்ள செய்திகளின்படி ’இந்தியன் 2’ படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’இந்தியன் 2’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்த நெடுமுடி வேணு மற்றும் விவேக் ஆகிய இருவரும் காலமாகி விட்டனர். இதனால் இந்த இருவரது காட்சியை வேறு நடிகர்களை வைத்து மீண்டும் படமாக்குவதா? அல்லது இந்த இருவரின் கேரக்டர்களை படத்தில் இருந்து நீக்குவதா? என்ற பெரும் சவால் படக்குழுவினர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல் காஜல் அகர்வால் இந்த படத்தில் நடித்த நிலையில் அவர் திருமணமாகி குழந்தையும் பெற்றுவிட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு அவர் தொடர்ந்து வருவாரா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் இதற்கான மாற்று திட்டம் இயக்குனர் ஷங்கரிடம் இருப்பதாகவும் படப்பிடிப்பில் இதனால் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சுமார் 60% படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பை இவ்வருடத்தில் முடித்து அடுத்த ஆண்டு இந்த ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கமல்ஹாசன், சித்தார்த், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண, ரகுல் ப்ரித்திசிங், ப்ரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos