எத்தனை நிவாரணம் கிடைத்தாலும் ஈடு செய்ய முடியாது: கமல்ஹாசன் அறிக்கை

  • IndiaGlitz, [Tuesday,December 03 2019]

மேட்டுப்பாளையத்தில் நேற்று சுற்றுச்சுவர் இடிந்ததால் 17 பேர் பலியான சம்பவம் அனைவரையும் உலுக்கிய நிலையில் இந்த சம்பவம் குறித்து சிலர் உண்மையாகவே கண்டனம் தெரிவித்தும் சிலர் அரசியல் செய்யவும் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலக நாயகனுமாகிய கமல்ஹாசன் நேர்மையாக, அரசியல் செய்யாமல் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பெய்த கடும் மழையில் இடிந்த கற்சுவர் அருகில் இருந்த வீடுகளில் விழுந்ததால் நான்கு வீடுகளில் இருந்த 17 பேர் உயிரிழந்த அதிர்ச்சியான செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன்

இது ஒரு விபத்தென்றாலும், இதில் ஏதேனும் தவறு நடந்திருக்குமாயின் அரசும் காவல்துறையும் அதை நேர்மையுடன் அணுகி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க ஆவன செய்ய வேண்டும். எத்தனை நிவாரணம் கிடைத்தாலும் இந்த இழப்பை ஈடு செய்ய இயலாது.

இருப்பினும் அவர்களின் துயரில் நானும் பங்கேற்கிறேன். வரும் மழைக்காலங்களில் மக்கள் கவனத்துடனும், அரசு முன்னெச்சரிக்கையுடனும் இருந்து பெரும் சேதம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் இருந்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

More News

இந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை பழி வாங்குமோ? ரஜினி பட இயக்குனர் டுவீட்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்ததால் ஏற்பட்ட விபத்தில் 17 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது தெரிந்ததே.

22 வயது இளைஞனிடம் சிக்கிய 9ஆம் வகுப்பு மாணவி: மெரீனாவில் நடந்த கொடூரம்

சென்னை மெரினா கடற்கரையில் 9ஆம் வகுப்பு மாணவி ஒருவரை 22 வயது இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பசியின் கொடுமையால் மணலை சாப்பிட்ட குழந்தைகள்: ஒரே ஒரு வீடியோவில் திடீர் திருப்பம்

பசிக்கொடுமையால் குழந்தைகள் மணலை அள்ளி சாப்பிட்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகியதை அடுத்து அந்த குழந்தைகளுக்கு தற்போது நல்வாழ்வு கிடைத்துள்ளது 

ஆர்மி கேண்டினுக்குள் நுழைந்த காட்டு யானை..!

மேற்குவங்கத்தில் ராணுவ கேண்டீனுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை விரட்டியடிக்கப்பட்டது. சிலபாடா வனப்பகுதியை ஒட்டியுள்ள ஹசிமாராவில் ராணுவ வீரர்களுக்கான கேண்டீன் உள்ளது

என் மனைவி தீவிரவாதி..! டெல்லி விமான நிலையத்தை அதிரவைத்த பீஹார் இளைஞர்

சென்னையில் பிரபல தோல் தொழிற்சாலை நடத்தி வருபவர் நஸ்ருதீன். இவருடைய சொந்த ஊர் பீஹார் ஆகும். இவர் தன்னுடைய தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்த சபீனா என்ற பெண்னை காதலித்தார்.