close
Choose your channels

பாதாம் தெரியுது, ஆதாம் தெரியலையா? ஜிபி முத்துவை கலாயத்த கமல்ஹாசன்!

Saturday, October 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பாதாம் தெரியுது ஆதாம் தெரியவில்லையா? என பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஜிபி முத்துவை கமல்ஹாசன் கலாய்க்கும் காட்சியின் புரோமோ வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலேயே ஜிபி முத்துவிடம் ஆதாம் குறித்து கூறி கமல்ஹாசன் கலாய்த்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் அதில் ஜிபி முத்துவை ’கொஞ்சம் எழுந்திருங்கள், உங்களிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்’ என்று கமல்ஹாசன் கூறுகிறார்.

அப்போது பாதாம் பருப்பை சாப்பிட்டு கொண்டிருந்த ஜிபி முத்து ’பாதாம்’ என்று கூற அதற்கு கமல்ஹாசன், ‘பாதாம் தெரியுது, ஆதாம் தெரியவில்லையா? அங்கே ஆதாம் எவ்வளவு வருத்தப்படுகிறார் தெரியுமா? என்று கூற அதற்கு அப்பாவியாக ஜிபி முத்து, ‘ஆதாமா, அவர் எங்கே இருக்கிறார்? என கேட்க மற்ற சக போட்டியாளர்கள் சிரிக்கின்றனர்.

முன்னதாக சாந்தியிடம் கமல்ஹாசன், ‘உங்களுக்கு ஒன்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்கள். கொஞ்சம் ஏமாந்தீங்கன்னா உங்களுக்கே உப்புமா கொடுத்து விடுவார்கள்’ என்று கூறுகிறார்.

அதேபோல் மகேஸ்வரியிடம் ’நீங்கள் அடிக்கடி முட்டிக்கிறீங்க போல’ என்று கூறிய பின் திடீரென சமாளித்த கமல்ஹாசன் ’கண்ணாடியில் முட்டிக்கிறீங்க’என்று கூறினார்.

மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சியை கமல்ஹாசன் காமெடியுடன் விறுவிறுப்பாக கொண்டு செல்வார் என்பது இந்த புரமோ வீடியோ வில் இருந்து தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.