பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? பாபர் மசூதி தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Wednesday,September 30 2020]

கடந்த 1992ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் துணை பிரதமர் எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட பல பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கு கடந்த 28 ஆண்டுகளாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இன்று காலை இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே விடுதலை செய்யப்படுவதாக இந்த தீர்ப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இந்த தீர்ப்பு குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது: நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும் அழுத்தமான ஆதாரங்களையும் வழக்கு தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது.

More News

'பிக்பாஸ் 4' ஆரம்பிக்கும் நேரத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறிய 'பிக்பாஸ் 3' போட்டியாளர்! 

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்னும் நான்கு நாட்களில் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இதுகுறித்த புரமோக்கள், விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

தனிமையான வில்லா, நீச்சல்குளத்தில் மாளவிகா: வைரலாகும் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை மாளவிகா மோகனன், தற்போது தளபதி விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கிரிக்கெட்டை அடுத்து சினிமா: தல தோனியின் அதிரடி முடிவு

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தல தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த தொடரில் அவர் தனது திறமையை மீண்டும் நிரூபிப்பார்

அரியர் மாணவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கும் அறிவிப்பு!!! ஏஐசிடிஇ அதிரடி!!!

தமிழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் அரியர் தேர்வுகளுக்கு, தேர்வு எழுதாமலே தேர்ச்சி வழங்கும் அறிவிப்பை தமிழக அரசு கடந்த மாதம் வெளியிட்டு இருந்தது.

13 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சிஎஸ்கே அணிக்கு கிடைத்த சோகம்!

13 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது