'ஹேராம்' படம் குறித்து வருத்தம் தெரிவித்த கமல்ஹாசன்!

  • IndiaGlitz, [Tuesday,February 18 2020]

கடந்த 2000ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 18ஆம் தேதிதான் உலக நாயகன் கமல்ஹாசன், ஷாருக்கான், ராணி முகர்ஜி, வசுந்தராராஜ், ஹேமாமாலினி உள்பட பலர் நடித்த ‘ஹே ராம்’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் வசூல் அளவிலும் விமர்சனங்கள் அளவிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் வரும் ஒருசில காட்சிகள் இன்றைய காலத்திற்கும் பொருத்தமாக இருக்கும் வகையில் தீர்க்கதரிசனமாக கமல் படமாக்கியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதி இயக்கிய இந்த படம் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவு செய்ததை அடுத்து இதுகுறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு டுவிட்டை பதிவுசெய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஹே ராம் வெளியாகி 20 ஆண்டுகள் முடிந்துவிட்டன. சரியான நேரத்தில் நாங்கள் இந்த படத்தை உருவாக்கியதில் மகிழ்ச்சி. ஆனால் அதே நேரத்தில் இந்த படம் சுட்டிக்காட்டிய அச்சங்களும் எச்சரிக்கைகளும் தற்போது நிஜமாகவே நிறைவேறிக்கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. இந்த சவால்களை நாட்டின் நல்லிணக்கத்தின் மூலம் தான் நாம் சமாளிக்க வேண்டும். நாளை நமதே! என்று குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசனின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது

More News

அகமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் – ட்ரம்ப்  திறந்து வைக்கிறார்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகிற 25, 26 ஆம் தேதிகளில் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார்.

பிரபல பாடகி தூக்கில் தொங்கி தற்கொலை: எழுதிய கடிதத்தில் திடுக்கிடும் தகவல்!

பிரபல கன்னட பாடகி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதும் தற்கொலைக்கு முன் அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருக்கிறது என்ற செய்தியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மெஸ்ஸிக்கு கிடைக்காத விருதை பெற்ற சச்சின்: குவியும் பாராட்டுக்கள்

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு லாரியஸ் என்ற அமைப்பு விருது வழங்கி கெளவிரத்துள்ளது அவருடைய ரசிகர்களுக்கு பெருமைக்குரியதாக கருதப்படுகிறது

ரஜினி கட்சிகள் சேரத் தயாராக இருக்கும் அதிமுக அமைச்சர்கள்: பிரபல அரசியல் கட்சி தலைவர் பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் மாதம் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது கட்சியில் ஒரு சில கட்சிகளில் உள்ள முன்னணி தலைவர்கள்

45 வயது பெண்ணுடன் 28 வயது இளைஞர் கள்ளக்காதல்: இருவரையும் வெட்டிக்கொன்ற கணவர்

45 வயது பெண்ணும் 28 வயது இளைஞரும் கள்ளக்காதலில் ஈடுபட்டு இர்ந்த நிலையில் அந்த பெண்ணின் 58 வயது கணவர் இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது