பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார்: கமல்ஹாசன் டுவீட்

  • IndiaGlitz, [Thursday,October 22 2020]

தெலுங்கானா மாநிலத்தில் திடீரென பெய்த கனமழை காரணமாக அம்மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய வெங்காய வரத்து முற்றிலும் நின்று போனது. இதனால் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை தமிழகத்தில் படிப்படியாக ஏறி தற்போது கிட்டத்தட்ட நூறு ரூபாய்க்கு நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இருப்பினும் தமிழக அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து வெளிநாட்டில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து வருகிறது. எனவே இன்னும் ஓரிரு நாளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.50க்கும் குறைவாக விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் வழக்கம்போல் வெங்காயம் விலையை வைத்து அரசியல்வாதிகள் அரசியல் செய்து வருகின்றனர். ஏற்கனவே ஒருசில அரசியல் கட்சி தலைவர்கள் இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த நிலையில் தற்போது வெங்காய விலை குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார்: அதில் அவர் கூறியிருப்பதாவது

பெரியாரே வந்தாலும் இனி வெங்காயம் என வையார்.

விண்ணில் பறக்கும் வெங்காய விலை பார்த்து நம் அன்னைமார்களும் இனி சமையலில் அதை வையார்.

விலையிறங்குவாயா வெங்காயமே?

More News

பிக்பாஸ் 3 பிரபலத்தின் ஆதரவை பெற்ற சுரேஷ் சக்கரவர்த்தி!

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வயதான போட்டியாளர்கள் அதிகபட்சமாக ஐந்து அல்லது பத்து வாரங்களுக்குள் வெளியேற்றப்படுவார்கள்.

இன்று முதல் மீண்டும் 'வலிமை' படப்பிடிப்பு: அஜித் கலந்து கொள்கிறாரா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்த நிலையில் சமீபத்தில் மத்திய மாநில அரசுகள் படப்பிடிப்புக்கு

சிம்புவின் ஆச்சரிய மாற்றம்: வைரலாகும் வீடியோ

நடிகர் சிம்பு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சமூக வலைத்தளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் சமீபத்தில் அவர் மீண்டும் சமூக வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக என்ட்ரி ஆகிறார்

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவரை கண்டுபிடித்த சைபர் க்ரைம்!

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படமான '800' திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டதில் இருந்து அவருக்கு கண்டனங்கள் குவிந்தன.

ரியோ-ரம்யா மோதல்: ஒரு வழியாக வாயை திறந்த ஷிவானி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வாயை திறக்காமல் மணிரத்னம் பட வசனம் போல் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசிக் கொண்டிருந்த இரண்டு போட்டியாளர்கள் ஆஜித் மற்றும் ஷிவானி.