யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Tuesday,March 20 2018]

உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன் கிளம்பிய ராமராஜ்ய ரதயாத்திரை, அதன்பின்னர் மகாராஷ்டிரா, கர்நாடகம், கேரளம் உள்பட ஐந்து மாநிலங்கள் வழியாக எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பயணம் செய்தது. ஆனால் இன்று அந்த ரதயாத்திரை தமிழகத்தில் நுழையவுள்ளதாக செய்திகள் வெளிவந்ததை அடுத்து இந்த ரத யாத்திரையால் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் கெட்டுவிடும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இதனையடுத்து நெல்லை மாவட்டத்தில் நேற்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை தமிழக எல்லையில் ரதம் நுழைந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் கைதானார்கள். இன்னும் நெல்லை மாவட்டத்தில் ஒருவித பதட்ட நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு' என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த பதிவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி சமூக  வலைத்தள பயனாளிகளிடம் இருந்து கிடைத்து வருகிறது.

More News

விஜய் படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா? பிரபல தயாரிப்பாளர் கேள்வி

தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவின்படி மார்ச் 1ஆம் தேதியில் இருந்து புதிய படங்கள் வெளியீடு இல்லை என்றும், மார்ச் 16ஆம் தேதியில் இருந்து படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது

சூப்பர் ஸ்டாரின் தங்கை கேரக்டரில் மியாஜார்ஜ்

இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான 'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை மியா ஜார்ஜ்

சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல்: கணவர் இறுதி சடங்கில் கலந்து கொள்கிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் இருக்கும் சசிகலா, தனது கணவர் நடராஜன் இன்று காலை உடல்நலக்கோளாறால்

தானியங்கி கார் மோதி பெண் பலி

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் இயங்கி வரும் தனியார் கார் புக்கிங் நிறுவனம் ஒன்று சமீபத்தில் தானியங்கி கார்களை அறிமுகம் செய்தது

வீடியோ கேம் விளையாட அனுமதிக்காத அக்காவை சுட்டு கொலை செய்த தம்பி

மிஸிசிபி நகரில் 9 வயது சிறுவன் ஒருவன் தனது உடன்பிறந்த அக்காவை சுட்டு கொலை செய்துள்ளான்.