டி.என்.சேஷன் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்

  • IndiaGlitz, [Monday,November 11 2019]

இந்திய தேர்தல் ஆணையத்தின் 10வது தலைமை தேர்தல் ஆணையராக கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை பதவி வகித்து தேர்தலில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்து, அரசியல்வாதிகளுக்கு அடிபணியாமல் நியாயமான தேர்தல்களை நடத்தியவர் டி.என்.சேஷன். இவர் நேற்று இரவு தனது சென்னை இல்லத்தில் வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் டி.என்.சேஷன் மறைவு குறித்து உலக நாயகன் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கூறியபோது, ‘தைரியம், நம்பிக்கை உருவகமாக நினைவு கூறப்படுபவர் டி.என்.சேஷன் அவர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தேர்தல் ஆணையத்தின் சக்திவாய்ந்த பாத்திரத்தை பொதுமனிதனின் விவாதத்துக்கு எடுத்து வந்தவர் டி.என்.சேஷன் என்றும் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு டி.என்.சேஷன் அவர்களை அவரது இல்லத்தில் கமல்ஹாசன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தனது உடல்நிலை சரியாக இருந்தால் உங்கள் கட்சியில் சேர்ந்திருப்பேன் என்றும், அரசியல் பயணம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம்பெற எப்பொழுது வேண்டுமானாலும் தன்னை சந்திக்கலாம் என்றும் டி.என்.சேஷன் தன்னிடம் கூறியதாக கமல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்

முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உடல்நலக் குறைவால் சென்னை அடையாற்றில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 87

அஜித்தின் 'வலிமை' கால தாமதம் ஆவது ஏன்? போனிகபூர் 

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவான 'நேர்கொண்ட பார்வை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில்

உதயநிதி ஸ்டாலினின் 'சைக்கோ' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கோலிவுட் திரையுலகின் இளம் நாயகர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியல் பணிகளுக்கு இடையே மூன்று படங்களில் நடித்து வருகிறார்

காமெடி நடிகர் இயக்கும்  முதல் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்

பிரபல காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில்'எல்கேஜி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது

'அயோத்தி' தீர்ப்பு குறித்து இயக்குனர் பா.ரஞ்சித்தின் கருத்து

இந்தியாவே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு நேற்று காலை வெளியானது. இந்த தீர்ப்பு இந்துக்களுக்கு ஆதரவாக வந்தாலும் இஸ்லாமியர்களுக்கும் மாற்று இடம் கொடுக்க வேண்டும்