தூங்கும் அரசு, செவிடர் காதில் ஊதிய சங்கு: கமல்ஹாசனின் காட்டமான டுவீட்டுக்கள்

  • IndiaGlitz, [Monday,September 25 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் அவருடைய கருத்துக்களும் முன்பை விட தற்போது கொஞ்சம் காட்டமாகவே வெளிப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவன் பார்கவ் என்பவர் டெங்கு காயச்சல் காரணமாக  உயிரிழந்தார். 

கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதியே கமல்ஹாசன் டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து தனது டுவிட்டரில் ஒரு டுவீட்டை பதிவு செய்தார். இந்த நிலையில் இதுவரை தமிழகத்தில் பார்கவ் மாணவனையும் சேர்த்து தமிழகத்தில் தற்போது வரை டெங்கு காய்ச்சலுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதுகுறித்து கொஞ்சம் காட்டமாக நேற்று தனது சமூக வலைத்தளத்தில் கமல்ஹாசன் கூறியதாவது:

'செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜுரச் சங்கு வீண். கோபாலபுரம் DAV பள்ளி மாணவன் பார்கவ் பலி. டெங்கு மரணம் தவிர்க்க ஆவன செய்யாஅரசு அகல வேண்டும்'

'அரசு தூங்குகிறது பெற்ரோர் விழித்திருங்கள். இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலை பெறாது அமையாதீர்'

இந்த டுவீட்டுக்களுக்கு பின்னராவது அரசு விழித்தெழுந்து டெங்கு காயச்சலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

More News

ராம்கியின் ரீஎண்ட்ரி 'இங்கிலீஷ் படம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த 1990களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த நடிகர் ராம்கி நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நாயகனாக ரீஎண்ட்ரி ஆகியுள்ள படம் 'இங்கிலீஷ் படம்.

கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜூக்கு விஷால் செய்த கெளரவம்

மிதாலிராஜ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டி வரை சென்று நூலிழையில் கோப்பையை இழந்தது.

இனிமேல் அரசியலுக்கு வரும் நடிகர்கள் தோல்வியடைவார்கள்: திருமுருகன் காந்தி

கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், விஷால் உள்பட திரைநட்சத்திரங்கள் பலர் மிக விரைவில் அரசியல் களம் புகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் கமல்ஹாசன் முந்திவிடுவார் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதியின் 'கருப்பன்' திரைமுன்னோட்டம்

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சென்னை மெரீனாவில் நடத்திய உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றதில் இருந்தே தமிழ் திரையுலகினர்களின் பார்வை ஜல்லிக்கட்டு பக்கம் திரும்பியுள்ளது.

நொய்யல் ஆற்றின் நுரைக்கு மக்கள் சோப்பு போட்டு குளிப்பதே காரணம்: தமிழக அமைச்சர்

சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பண்ணன், பொதுமக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் தான் நொய்யல் ஆற்றில் நுரை பொங்குவதற்கு காரணம் என்று கூறியுள்ளது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.