இன்று கொரோனா தடுப்பூசி, அடுத்த மாதம் ஊழல் தடுப்பூசி: கமல்ஹாசன் டுவீட்

  • IndiaGlitz, [Tuesday,March 02 2021]

இன்று ஊழல் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டேன் என்றும் அடுத்த மாதம் ஊழல் தடுப்பூசிக்கு தயாராகி விடுங்கள் என்றும் கமலஹாசன் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் அடுத்த கட்டமாக தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் தொடங்கிய நிலையில் பல பிரபலங்கள் தொடர்ச்சியாக இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் உலக நாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதனை அடுத்து அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தன் மேல் மாத்திரமல்ல, பிறர் மேல் அக்கறையுள்ளவர்களும் போட்டுக்கொள்ள வேண்டும். உடல் நோய்த் தடுப்பூசி உடனடியாக, ஊழல் நோய்த் தடுப்பூசி அடுத்த மாதம். தயாராகிவிடுங்கள்.
 

More News

கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட இரண்டு தமிழ் நடிகைகள்!

நேற்று முதல் நாடு முழுவதும் அடுத்த கட்டமாக கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்தது. ஏற்கனவே பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு,

'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ் தேதி மீண்டும் ஒத்திவைப்பா?

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா நடிப்பில் உருவாகிய 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் மார்ச் 5ஆம் தேதி ரிலீசாவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

புதிய போஸ்டரை வெளியிட்ட 'டாக்டர்' படக்குழு: வைரலாக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் 'டாக்டர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து வரும் 26ஆம்

'பிகில்' பட நடிகர் மகனுக்கும் பிரபல நடிகைக்கும் திருமணமா?

தளபதி நடிப்பில் உருவான 'பிகில்' திரைப்படத்தில் வில்லனாக நடித்த ஜாக்கி ஷெராப் மகனுக்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் திருமணம் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது 

வரலட்சுமி குடும்பத்தில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட மேலும் ஒருவர்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகை வரலட்சுமியின் தாயார் நேற்று கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்ற தகவல் வெளியானது என்பதும் இது குறித்த வீடியோவை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு