சென்னை இளைஞரின் அமெரிக்க ஏஐ நிறுவனத்தில் கமல்ஹாசன்.. வைரல் புகைப்படங்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் சென்னை இளைஞர் ஏஐ நிறுவனம் ஒன்றை வைத்திருக்கும் நிலையில் அந்த நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்ற கமல்ஹாசன் இது குறித்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்து கூறிய ட்வீட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
உலக அளவில் பிரபலமான பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அரவிந்த் சீனிவாஸ் என்பவர் உள்ளார் என்பதும் இவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பதும் சென்னை ஐஐடியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் கூகுளுக்கு இணையாக ஏஐ ஆராய்ச்சி நிறுவனமாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு உலகநாயகன் கமல்ஹாசன் சென்றார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சினிமா முதல் கணினி அறிவியல் வரைக்கும், பல துறைகளில் உபகரணங்களும் தொழில்நுட்பங்களும் கணிசமான முன்னேற்றம் கண்டிருக்கின்றன. ஆனாலும், “அடுத்ததாக என்ன?” என்ற மனிதனின் ஆய்வும் ஆராய்ச்சியும் முடிவின்றி தொடர்கின்றன.
அந்தத் தேடலுக்கே ஒரு பதிலாகப் தோன்றுகிறது, இந்தியாவின் அறிவுத் தோட்டங்களில் ஒளிரும் பேரறிவுச் செழிப்புடன் உருவாகிய பெர்ப்லெக்ஸிடி நிறுவனம். அதன் தலைமையகம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தை உருவாக்கியவர், அரவிந்த் ஶ்ரீநிவாஸ் மற்றும் அவரது ஆராய்ச்சி குழு.
“ஒரு கேள்வி – ஒரு பயணம்” என்றே சொல்லலாம். பெர்ப்லெக்ஸிடி அலுவலகத்தை நேரில் பார்த்தபோது எனக்குள் ஏற்பட்ட ஆர்வத்தைக் சொல்வதற்கு வார்த்தைகளே போதவில்லை. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு – Curiosity kills the cat. ஆனால் இங்கே, ஆர்வமே அரவிந்த் ஶ்ரீநிவாஸைப் போன்ற அறிவாளியை உருவாக்கியுள்ளது! என்று கமல் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து பெர்ப்லெக்ஸிடி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அரவிந்த், கமல்ஹாசனுடனான சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
“பெர்ப்லெக்ஸிடி அலுவலகத்தில் உங்களைச் சந்தித்தது ஒரு மறக்கமுடியாத தருணம். தொடர்ந்தும் கற்றல் மீது நீங்கள் காட்டும் ஆழ்ந்த பற்றும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை திரைப்பட உற்பத்தியில் கலப்பதற்கான உங்கள் பார்வையும் மற்றவர்களுக்கு உண்மையான சுடர் விளக்கு இருக்கும். தற்போது நீங்கள் பணியாற்றும் ‘தக் லைஃப்’ திரைப்படம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்!”
From cinema to Silicon, the tools evolve—but our thirst for what’s next remains. Inspired by my visit to Perplexity HQ in San Francisco, where Indian ingenuity shines through @AravSrinivas and his brilliant team building the future—one question at a time.
— Kamal Haasan (@ikamalhaasan) April 10, 2025
Curiosity didn’t kill… pic.twitter.com/7Xe1WyIawC
Was great to meet and host you @ikamalhaasan at the Perplexity office! Your passion to still learn and incorporate the cutting edge technology in film making is inspirational! Wish you the best for Thug Life and future projects you are working on! pic.twitter.com/o2XjLt2PO9
— Aravind Srinivas (@AravSrinivas) April 11, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com