close
Choose your channels

திடீரென திருப்பதி செல்லும் கமல்ஹாசன்.. காரணம் இதுதான்!

Saturday, December 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மீண்டும் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக திருப்பதியில் உள்ள அடர்ந்த காடுகளில் செட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் இந்தப் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற இருக்கும் நிலையில் கமல்ஹாசன், ஷங்கர் உள்பட படக்குழுவினர் திருப்பதி செல்ல இருப்பதாகவும் அதில் முக்கிய காட்சிகள் படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடித்த பெரும்பாலான நட்சத்திரங்கள் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதால் இந்த காட்சி படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் காட்சி என்று கூறப்படுகிறது.

வரும் ஏப்ரல் மாதம் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் அதன்பிறகு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்படும் என்றும், விரைவில் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர், குரு சோமசுந்தரம், ரோபோ சங்கர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 2022ஆம் ஆண்டு கமல்ஹாசனின் ’விக்ரம்’ மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் 2023ம் ஆண்டு ‘இந்தியன் 2’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.