மு.க.ஸ்டாலின் அவர்களை வியந்து வாழ்த்துகிறேன்: கமல்ஹாசன் டுவீட்!

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் திமுக தொண்டர்கள் தொடர்ச்சியாக இன்று காலை முதல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உலக நாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் முக ஸ்டாலினின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான கமல்ஹாசன் சற்று முன்னர் தனது டுவிட்டரில் முக ஸ்டாலின் அவர்களை வியந்து வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்து பதிவு செய்த ட்விட்டில் கூறியிருப்பதாவது: விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்.

More News

ஐசிசி தரவரிசையில் ஹிட்மேனின் புது சாதனை… தொடர்ந்து அசால்ட் காட்டும் அஸ்வின்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்று இருக்கிறது.

புதிய கார் வாங்கிய 'குக் வித் கோமாளி' புகழ்: குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. 'குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

நாளை லாஸ்லியாவின் முதல் பட டீசர்: தயாராகி வரும் ஆர்மிகள்!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா நடித்த முதல் திரைப்படம் 'ஃபிரண்ட்ஷிப்' என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து

'கர்ணன்' திரைப்படத்தின் அடுத்த மாஸ் அப்டேட்டை தந்த கலைப்புலி எஸ்.தாணு!

தனுஷ் நடிப்பில் 'பரியேறும் பெருமாள்' இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிய 'கர்ணன்' திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது

'வாத்தி கம்மிங்' பாடலுக்கு வேற லெவல் வீடியோவை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்