ஒரே தசாப்தத்தில் மாநில எல்லையை கடந்த நண்பரை பாராட்டுகிறேன்: கமல்ஹாசன்

அரசியல் கட்சி தொடங்கிய ஒரே தசாப்தத்தில் மாநில எல்லையை கடந்து 2வது மாநிலத்தில் வெற்றிபெற்ற எனது நண்பருக்கு பாராட்டுக்கள் என உலக நாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கியபோது தொடக்க விழாவுக்கு வருகை தந்தவர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் என்பது தெரிந்ததே. கமல் ஹாசன் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக பல ஆண்டுகளாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் ஆட்சியிலிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியை பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி கோவா மாநிலத்திலும் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று கணக்கை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் குறிப்பிடவேண்டிய வெற்றியைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் நண்பர் அர்விந்த் கெஜ்ரிவால். கட்சி தொடங்கிய ஒரே தசாப்தத்தில் மாநில எல்லை கடந்து இரண்டாம் மாநிலத்தில் அழுத்தமாகக் காலூன்றியிருக்கும் ஆம் ஆத்மியைப் பாராட்டுகிறேன் என கூறியுள்ளார்.

More News

'நானே வருவேன்' மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட செல்வராகவன்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

பிறந்த நாளை மாலத்தீவில் கொண்டாடிய தமிழ் நடிகை: வைரல் வீடியோ

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகை தனது பிறந்தநாளை மாலத்தீவில் கொண்டாடியதை அடுத்து இது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

பாலா-சூர்யா படத்தில் இணையும் 3 பிரபலங்கள்?

சூர்யா நடித்த 'எதற்கும் துணிந்தவன்' என்ற திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அவர் நடிக்கயிருக்கும் அடுத்த திரைப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர்

மீண்டும் கேப்டன் ஆகிறாரா கோலி? சப்ஸ்பென்ஸை உடைத்த வைரல் வீடியோ!

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலி

வாழ்நாள் முழுவதும் இனி இதை செய்ய மாட்டேன்: யாஷிகா எடுத்த சபதம்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கி தனது உயிர் தோழியை இழந்த யாஷிகா ஆனந்த், இனிமேல் வாழ்க்கையில் இதனை செய்ய மாட்டேன் என்று சபதம் எடுத்து உள்ளதாக கூறியுள்ளார்.