close
Choose your channels

ரயில்பயணம் எனக்குப் பிடிக்கும்: கமல்ஹாசன் வெளியிட்ட மாஸ் வீடியோ!

Thursday, April 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரயில் பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும் என உலக நாயகன் கமல்ஹாசன் மாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’விக்ரம்’. ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் விளம்பரம் ரயில்களில் செய்யப்பட்டதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இது குறித்த வீடியோவை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

ரயில்பயணம் எனக்குப் பிடிக்கும். ரயிலில் படப்பிடிப்பு சுலபமானது என்பதால் இன்னும் பிடிக்கும். என் படங்களில் ரயில்கள் முக்கியமானவை. மூன்றாம் பிறை, மகாநதி, தேவர்மகன் என பல ரயில் காட்சிகள் உங்கள் நினைவுக்கு வரலாம். இப்போது என் படத்தைத் தாங்கிய ரயில்கள் வலம் வருவது மகிழ்ச்சியைத் தருகிறது’ என கூறியுள்ளார்.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.