close
Choose your channels

'கமல்ஹாசன் 232' படத்தில் புதிய டெக்னாலஜி அறிமுகம்!

Tuesday, September 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமலஹாசன் தனது படங்களில் புதுப்புது டெக்னாலஜிகளை அறிமுகம் செய்து வைப்பார் என்பது தெரிந்ததும். டால்பி, டிடிஎஸ் உள்பட பல டெக்னாலஜி அவரது திரைப்படங்களில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில், அனிருத் ரவிச்சந்திரன் இசையில் உருவாகவுள்ள ’கமலஹாசன் 232’ படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்படாத புதிய டெக்னாலஜி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த டெக்னாலஜி என்ன என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருப்பதாகவும் தகுந்த நேரத்தில் இந்த தகவலை படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த டெக்னாலஜி தமிழ் திரையுலகில் புதியது என்றும் இதுவரை யாரும் பயன்படுத்தாத டெக்னாலஜி என்றும் கோலிவுட்டில் செய்திகள் வலம் வந்து கொண்டு இருப்பதால் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது

கமலஹாசன் அறிமுகப்படுத்தும் இந்த டெக்னாலஜி என்னவாக இருக்கும் என்பதே தற்போது ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பாக உள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.