நூலிழையில் உயிர் தப்பிய கமல்-காஜல் அகர்வால்: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Thursday,February 20 2020]

கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பின்போது நேற்று நடந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இந்த விபத்தில் கமல் மற்றும் காஜல் அகர்வால் நூலிழையில் உயிர் தப்பியதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இது குறித்து இந்த விபத்தில் உயிர் தப்பிய மேக்கப் கலைஞர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிடும்போது ’இந்த மிகப் பெரிய விபத்திலிருந்து கமல்ஹாசன், காஜல் அகர்வாலுடன் நானும் சேர்ந்து தப்பினேன். ஒரே ஒரு நொடிக்குள் நாங்கள் இருந்த இடத்தை விட்டு உடனடியாக வெளியே குதித்தோம். நாங்கள் உட்கார்ந்திருந்த சேர்கள் கிரேனால் நசுக்கப்பட்டு இருந்தது. இந்த விபத்தில் நாங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம் என்றாலும் துரதிஷ்டவசமாக மூவரை இழந்து உள்ளோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் காஜல் அகர்வால் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிடும்போது ’ஜஸ்ட் ஒரே ஒரு நொடியில் நாங்கள் உயிர் தப்பியதால் இப்போது நான் இந்த மெசேஜை டைப் அடித்து கொண்டு இருக்கின்றேன். இந்த விபத்து குறித்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. இந்த விபத்தில் இருந்து ஒரே ஒரு நொடி ஒரு உயிரை காப்பாற்றும் அளவுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்து கொண்டிருக்கிறேன். என்று குறிப்பிட்டு உள்ளார்

கமல், காஜல்அகர்வால், ஷங்கர் உள்பட முக்கிய கலைஞர்கள் இந்த விபத்தில் அதிஷ்டவசமாக உயிர்தப்பிய உள்ளனர் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

உருத்தெரியாமல் மாறிய பேருந்து: அவிநாசி அருகே நடந்த விபத்தில் 20 பேர் பலி

திருப்பூர்  மாவட்டம் அவிநாசி அருகே கேரள அரசு பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

'இந்தியன் 2' விபத்து: கிரேன் ஆபரேட்டர் தலைமறைவால் பரபரப்பு

உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு நேற்று இரவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ராட்சத கிரேன் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தினால்

'இந்தியன் 2' விபத்தில் கார்ட்டூனிஸ்ட் மதன் மருமகன் பலி: அதிர்ச்சி தகவல்

கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக

'இந்தியன் 2' படப்பிடிப்பில் திடீர் விபத்து: 3 பேர் பலி ,10 பேர் காயம் 

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் 'இந்தியன் 2'படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு அருகே உள்ள தனியார் பிலிம்சிட்டி ஒன்றில் நடைபெற்று வருகிறது 

இந்தியாவில் தொடரும் பணவீக்கம் –  யாரெல்லாம் பாதிக்கப் படுவார்கள்?

 ஒரு நாட்டில் நிலவும் பணவீக்கம் (Inflation), பணவாட்டம் (Deflation) இரண்டுமே கடுமையான பொருளாதார பாதிப்பினை ஏற்படுத்தும்