அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் 'களம் நமதே'.. அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்..!

  • IndiaGlitz, [Tuesday,May 09 2023]

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான ’களம் நமதே’ என்ற தீம் பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள உலக நாயகன் கமல்ஹாசன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.



கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார் என்பதும் அதன் பிறகு விளையாட்டுத்துறைக்கு பல முக்கியத்துவங்கள் கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை ’களம் நமது’ என்பது குறித்த தீம் பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் தமன் இசையில் உருவான இந்த பாடலை தனது டுவிட்டர் பக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் பகிர்ந்து உள்ளார். மேலும் விளையாட்டு துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு வரும் உதயநிதி அவர்களுக்கு தனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை - களம் நமதே!’ எனும் பெயரில் மக்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி களம் காணும் வகையில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர், அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். தமிழக மக்கள் இந்தப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று பயனடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். களம் நமதாகட்டும்.

 

More News

நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ஜெயம் ரவி மனைவியின் போட்டோஷூட்.. குஷ்பு, ஸ்ரேயா சரணின் கமெண்ட்ஸ்..!

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி சமீப காலமாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிலையில் அவர் பதிவு செய்யும் போட்டோஷூட் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில்

ஊர் முழுக்க ஐஸ் க்ரீம் இலவசம்… ரசிகர்களுக்கு வித்தியாசமான ட்ரீட் கொடுத்த இளம் நடிகர்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருந்துவரும் நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது ‘லிகர்’ வெற்றியினால்

என்னவொரு கனிவு? நடிகை ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ்-ஐ கொண்டாடும் ரசிகர்கள்!

பாலிவுட் சினிமாவில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவரும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ்

பிறந்தநாள் கொண்டாடும் இளம் நடிகர் விஜய தேவரகொண்டா… நீங்கள் அறியாத 5 சீக்ரெட்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் துள்ளலான நடிப்புடன் இளம் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா தனது 34

'மானிட உருவத்தில் வாழ்ந்த கடவுள்: பிரபாஸின் 'ஆதி புருஷ்' டிரைலர்..!

பிரபாஸ் நடித்து வரும் 'ஆதி புருஷ்' என்ற  திரைப்படத்தின் டிரைலர் மே 9ஆம் தேதி  வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. உலகம் முழுதும் இந்த ட்ரெய்லரை 70 நாடுகளில் உள்ள திரையரங்குகளில்