ராகுல்காந்தியை சந்திக்கின்றார் கமல்! புதிய கூட்டணியா?

  • IndiaGlitz, [Wednesday,June 20 2018]

நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் கட்சி ஆரம்பித்து பிசியாக உள்ளார். 'விஸ்வரூபம் 2' ரிலீஸ், 'பிக்பாஸ் 2' ஆகிய பணிகளுக்கு இடையே அவர் அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் கமல் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், இதற்காக தேர்தல் கமிஷன் அழைப்பின்பேரில் கமல் டெல்லி சென்றதாகவும் இன்று காலை தகவல்கள் வெளிவந்தது. இதனையடுத்து டெல்லி சென்றா கமல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சற்றுமுன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்திருப்பதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவியேற்பு விழாவின் போது ராகுல்காந்தியை சந்தித்த கமல் மீண்டும் அவரை சந்திக்கவிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சந்திப்பு வரும் பாராளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணியை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

அருண்விஜய்க்கு கால்ஷீட் தர மறுத்த விஜய்! ஏன் தெரியுமா?

விஜய் நடிக்கும் படம் ஒன்றை தான் தயாரிக்க விரும்பி, அவரை கடந்த சில வருடங்களுக்கு முன் சந்தித்ததாகவும், ஆனால் தனக்கு அவர் கால்ஷீட் தராமல் அவர் கொடுத்த அறிவுரை

முன்ஜாமீன் கிடைக்காத எஸ்.வி.சேகருக்கு கிடைத்த ஜாமீன்

நகைச்சுவை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்தார்.

காயத்ரியாக உருமாறிய மும்தாஜ்: நெட்டிசன்கள் அலசல்

பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவராக வரவேண்டும் என்று விரும்பிய மும்தாஜ், தனக்கு அந்த பதவி கிடைக்காமல் தன்னைவிட வயதில், அனுபவத்தில் குறைந்த ஜனனிக்கு

பாலாஜி-நித்யா மோதல்: பிக்பாஸ் வீட்டில் நடந்த முதல் சண்டை

பிக்பாஸ் வீட்டில் எப்போது முட்டல் மோதல் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று அந்த சண்டையை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிஸ் இந்தியா பட்டம் வென்ற சென்னை கல்லூரி மாணவி

ஒவ்வொரு ஆண்டும் மிஸ் இந்தியா போட்டி சிறப்பாக நடந்து வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான மிஸ் இந்தியா போட்டி நேற்று இரவு மும்பையில் நடைபெற்றது