ஏஐ டெக்னாலஜியை கண்டு பயப்பட வேண்டாம்.. மீண்டும் ஒரு தீர்க்கதரிசன கருத்தை கூறிய கமல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


உலகம் முழுவதும், கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் ஏஐ என்ற நுழைந்துவிட்ட நிலையில், திரைத்துறையிலும் ஏஐ நுழைந்து விட்டதாகவும், அதனால் திரை உலகிற்கே ஆபத்து எனவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால், ’தக்லைஃப்’ படத்தின் புரமோஷன் விழாவில், “ஏஐ தொழில்நுட்பத்தை கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை,” என்று தெரிவிக்கப்பட்டது.
“ஏஐ தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ளலாம் என்பதற்காகத்தான் நான் அமெரிக்கா சென்றேன். ஆனால் அது என்னைவிட, நம்மைவிட, பெரியதாக இருக்கிறது. அதை புரிந்து கொள்ளாமல் கை வைக்கக் கூடாது. அதை பயன்படுத்த தொடங்கியவர்கள் அதிகமான நபர்களாக இருக்கின்றனர்.
சினிமாவை பொருத்தவரை, ஏஐ இன்னும் ஆரம்ப நிலை தான் உள்ளது. ஆனால், அது நம் அனைவரையும் வாழ்க்கையில் இருக்கப் போகிறது என்பது உண்மை. அதே நேரத்தில், அது நம்மை மிஞ்சி விடுமோ என்று பயப்பட தேவையில்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.
முதல் முறையாக சாட்டிலைட் சேனல்கள் வந்தபோது, பல திரை உலகினர் அதனை எதிர்த்தனர். ஆனால் கமல்ஹாசன் மட்டும் தான், “சாட்டிலைட் சேனல்கள் திரை உலகிற்கு லாபம் தரும்,” என்று தீர்க்கதரிசனமாக கூறினார்.
தற்போது, சாட்டிலைட் சேனல்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் திரை உலகிற்கு மிகப்பெரிய வருமானம் தரும் தளங்களாக மாறியுள்ளன. அதுபோல, சினிமாவிலும் சில தகவல்களை தீர்க்கதரிசன காட்சிகளை தன்னுடைய படங்களில் கமல்ஹாசன் கூறியிருந்தார்.
சுனாமி என்றால் என்னவென்றே தெரியாத காலத்தில் ’அன்பே சிவம்’ படத்தில் சுனாமி குறித்து அவர் தெரிவித்திருந்தார். எபோலோ வைரஸ்கள், தாலிபான் போன்றவையும் அவர் அவர் முன்கூட்டியே கணித்தவர் என்பதால் திரையுலகினர் அவரை தீர்க்கதரிசி என்று கூறி வருகின்றனர்.
அதேபோல் தற்போது அவர் ஏஐ குறித்து கூறிய கணிப்புகள் கூட சரியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com